சடலத்துடன் உடலுறவு..  சத்தீஸ்கர் ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!   - Seithipunal
Seithipunal


சடலத்துடன் உடலுறவு கொள்வது என்பது பாலியல் பலாத்காரமாகாது என நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.16 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றம்சாட்டப்பட்ட இந்த வழக்கில் இரு தரப்பும் சமரசமான போதுதான் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியது.

சத்தீஸ்கர் கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு காணாமல் போன 9 வயது தலித் சிறுமி ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த  சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை முடிவில்தான் திடுக் தகவல்கள் வெளியாகின. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் அந்த சிறுமி இறந்த பிறகும் அந்த சடலத்துடன் உடலுறவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.

 இது குறித்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் ஆகிய இருவர் மீது போக்சோ வழக்கு பதியபட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து  நீல்காந்த் போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தநிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீல்காந்த்தை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர். 

இந்தநிலையில்தான்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, பிபு தத்தா குரு ஆகியோர், 9 வயது சிறுமியின் வழக்கில் போக்சோ அல்லது பலாத்கார குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் . சடலத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது என்பது நெக்ரோபிலியா என்பதாகும்.எனவே  பாலியல் வன்கொடுமை குற்றம் நடந்திருந்தால் அதனால் பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருந்திருக்க வேண்டும்என்றும் . வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்வது என்பது தனி வழக்கு என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சடலத்துடன் உடலுறவு கொள்வது என்பது பாலியல் பலாத்காரமாகாது என நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sex with a corpse  Chhattisgarh High Court verdict  


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->