பிரசாந்த் நடிப்பில் ''அந்தகன்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal



'வைகாசி பொறந்தாச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகர்களும் ஒருவராக இருந்தவர். 

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் ''அந்தகன்'' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'அந்தாதூன்' என்ற திரைப்படத்தை தமிழில் ''அந்தகன்'' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தில் சிம்ரன், வனிதா, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

''அந்தகன்'' திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். தற்போது நடிகர் பிரசாந்த் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhagan movie release update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->