'அனிமல்' 3வது நாள் வசூல்: பாக்ஸ் ஆபிஸில் சுனாமி என படக்குழு ஆராவாரம்! - Seithipunal
Seithipunal


சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் 'அனிமல்'. இந்த திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. 

இந்த திரைப்படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதிலும் சிலர் பெண்களுக்கு எதிராக இந்த திரைப்படம் உள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர். 

திருவிழா அல்லாத நாட்களில் வெளியாகி இந்த திரைப்படம் முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது நாளில் ரூ. 236 கோடியும் மூன்றாவது நாளான நேற்று ரூ. 356 கோடி வசூலித்துள்ளது. இதனை பாக்ஸ் ஆபீஸ் சுனாமி என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Animal 3rd day collection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->