புடவையே வித்தியாசமா இருக்கே.. வினோதமான போட்டோஷூட் நடத்திய அனிதா சம்பத்.!
anitha sampath new saree Dropping design
பிக் பாஸ் நிகழ்ச்சி சில வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் பிரபலமடைந்து படவாய்ப்புகளுடன் ஜோராக இருக்கின்றனர்.
ஆனால் ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் விஜய் டிவியின் டிஆர்பிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பது உண்மை. எனவேதான் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் தான் அனிதா சம்பத். இதற்காக அவர் செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் பிக் பாஸ் சீசன் 4 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக புடவை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
English Summary
anitha sampath new saree Dropping design