எச்சரிக்கை!!! வரும் 27 - 30ம் தேதி வரை தமிழகத்தில் வெயில் கொளுத்தும்!!! - சென்னை வானிலை மையம் - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம்,"தமிழகத்தில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல இடங்களில் வெயில் கொளுத்தும் உச்சத்தை தொடும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 27ம் தேதி முதல் ஈரப்பதம் இல்லாத சூழல் உள்ளதால் வெயில் அதிகளவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.அதிலும் குறிப்பாக, ஈரோடு,சேலம், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில் வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இதனால் தின வேலைக்கு செல்பவர்கள் பாதிக்க படலாம் என மக்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

scorching hot Tamil Nadu from 27th to 30th Chennai Meteorological Department Warning


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->