பிரதமர் பாராட்டிய படத்திற்கு தடை விதித்த வளைகுடா நாடுகள்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கௌதம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஆர்ட்டிக்கிள் 370''. இந்த திரைப்படம் வெளியாகி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தின் மூலம் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தை குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் திரையிட படக்குழுவினர் 
அனுப்பி வைத்தனர். 

இந்த திரைப்படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக தெரிவித்து படத்துக்கு தடை விதித்துள்ளனர். 

இதனால் அங்கு வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ட்டிக்கிள் 370 என்ற திரைப்படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி பாராட்டிய படத்திற்கு வளைகுடா நாடுகள் தடை விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Article 370 movie ban


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->