மீண்டும் படத் தயாரிப்பில் களமிறங்கும் ஏவிஎம்.! - Seithipunal
Seithipunal


திரையுலகில் அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்த பெருமை வாய்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், தனது முதல் படைப்பாக 1932ம் ஆண்டு, 'அல்லி அர்ஜூனா' என்ற திரைப்படத்தை தயாரித்தார். 

அதன் பிறகு இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதாவது தமிழில், 'தூங்காதே தம்பி தூங்காதே', 'போக்கிரி ராஜா', 'பாயும் புலி', 'மிஸ்டர் பாரத்', 'நல்லவனுக்கு நல்லவன்', 'உயர்ந்த உள்ளம்', 'பேர் சொல்லும் பிள்ளை', "மனிதன்" என்று பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், ஏவிஎம் நிறுவனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிப்பில் களமிறங்க உள்ளது. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'அயன்’ திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AVM production company again start new movie


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->