ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்! மக்கள் தலையில் இடியை இறக்கிய ரிசர்வ் வங்கி!
Reserve bank ATM Money Extra Charge
வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் பரிவர்த்தனை கட்டணத்தை ரூ.22 ஆக உயர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
தற்போது, வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ஏ.டி.எம்.களில் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம்.
மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் 3 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது.
அதன்பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது இந்த கட்டணத்தை ரூ.22 ஆக உயர்த்த தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) பரிந்துரை செய்துள்ளது.
இதை அமல்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி தற்போது ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
Reserve bank ATM Money Extra Charge