மகா கும்பமேளா..பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புனித நீராடினார் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


பிரயாக்ராஜ் நகருக்கு இன்று காலை 11 மணியளவில் வருகை தந்த பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர்  புனித நீராடினார். 


 உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும்  மகா கும்பமேளாகடந்தமாதம்14ம்தேதிதொடங்கி நடைபெற்றுவருகிறது.உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர்.மேலும்  அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.அதேபோல பல அரசியல் கட்சி தலைவர்களும் ,முக்கிய பிரபலங்களும் புனித நீராடினர்

இந்நிலையில் பிரதமர் மோடி பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்தார்.அப்போது பலத்த போலீஸ் மத்தியில்  காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். இதனை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maha Kumbh Mela PM Modi takes holy dip amid tight security


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->