மீண்டும் வெளியான ''அயலான்'': கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''அயலான்''. இந்த திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிகப்படியான திரைகள் மற்றும் நாடுகளில் வெளியான திரைப்படம் ''அயலான்''. 

இந்த திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayalaan movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->