#Breaking: சிவகார்த்திகேயனின் முக்கிய படத்திற்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்.! அதிர்ச்சியில் படக்குழு.! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் "டாக்டர்" திரைப்படம் திரையரங்கில் வெளியானது. சிவகார்த்திகேயன், யோகி பாபு, பிரியா அருள் மோகன் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இவர் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இவரது நடிப்பில் டான் திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய நிலையில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படம்தான் அயலான். இந்த திரைப்படத்தை கொட்டப்பாடி ஜே.ராஜேஷ் மற்றும் ஆர்.டி. ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  

இத்தகைய நிலையில் டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தின் மீது கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை போட வேண்டும் என்று தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் திரைப் படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayalan movie restrictions


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->