தந்தை, மகன் தற்கொலை வழக்கு:  காங்கிரஸ் தலைவர் உள்பட 2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


தந்தை, மகன் தற்கொலை வழக்கில் வயநாடு காங்கிரஸ் தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இந்த வழக்கில்  பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 

கேரளா மாநிலம் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளராக  விஜயன் என்பவர் பதவி வகித்துவந்தார். இந்தநிலையில் இவரது மகன் ஜிஜேஷ் மற்றும் விஜயன் ஆகிய  2 பேரும் கடந்த மாதம் 27-ந் தேதி மணிச்சேரியில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் வயநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சுல்தான் பத்தேரி கூட்டுறவு வங்கியில் ஊழியர்களை நியமிக்க பலரிடம் இருந்து மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் விஜயன் ரூ.1½ கோடி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து  சுல்தான் பத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

அப்போது விஜயன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார்.அப்போது அந்த கடிதத்தில்  வங்கி ஊழியர் நியமனத்திற்கு பலரிடம் இருந்து பணம் பெற்று, அதனை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பாலகிருஷ்ணனிடம் கொடுத்தேன் என்றும்  ஆனால், அவர் பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களை நியமிக்க முன்வர வில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது பெரும் பூகம்பத்தை கிளப்பியது . இதையடுத்து கடிதத்தின்  அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் உடந்தையாக இருந்த வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்பச்சன், முன்னாள் பொருளாளர் கோபிநாத் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து  அவர்கள் 3 பேரும் முன் ஜாமீன் கேட்டு கல்பெட்டா செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த போது மனுவை விசாரித்த கோர்ட்டு, 3 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. இந்தநிலையில்  கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அப்பச்சன், கோபிநாத் ஆகிய 3 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

அப்போது , அப்பச்சன், கோபிநாத் ஆகிய 2 பேரிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father-son suicide case: Congress leader among 2 arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->