ரீ ரிலீசுக்கு தயாரான ''அழகி'' திரைப்படம்.! எப்போது தெரியுமா?  - Seithipunal
Seithipunal


தங்கர் பச்சன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ''அழகி''. இந்த திரைப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

இளையராஜா இசையமைத்த பாடல்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. பழைய தமிழ் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்வதுபோல் ''அழகி'' திரைப்படம் மீண்டும் வெளிய உள்ளது. 

சுமார் 22 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வருவதை இயக்குனரும் நடிகருமான ஆர். பார்த்திபன் மகிழ்ச்சியுடன் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட தரத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைதளத்தில் படத்தின் மறு வெளியீடு போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Azhagi movie rerelease update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->