பிக்பாஸ் ரசிகர்களே... இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்.! வெளியான புதிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் பற்றிய புதிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு முதல் சீசனில் மட்டும் ஏராளமான பிரச்சனைகள் இருந்தாலும் அதன் பிறகு ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது.

ஆறு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது ஏழாவது சீசனிற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் பிக் பாஸ் கமல்ஹாசன். கடந்த ஜனவரி மாதம் பிக் பாஸ் 6வது சீசன் முடிவிற்கு வந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சீசன் ஒரு வழியாக முடிந்தது.

இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அசீம் என்பவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வெற்றி குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும்  பிக் பாஸ் சீசன் 6 வெற்றிகரமாகவே நடந்து முடிந்தது. கொரோனா காலத்திற்குப் பிறகு  அக்டோபர் மாதம் துவங்கிய  ஜனவரி மாதம் முடிந்து வந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி.

தற்போது சீசன் 7 ஜூன் மாதமே தொடங்க இருப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சி குழு அறிவித்திருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 7 கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர்கள் யார் என்பது போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

big boss 7 will going to kick start soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->