பிரபல நடிகை நடிக்கும் முதல் ஹாலிவுட் படம்.!  - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை அலியா பட்டின் கடைசிப் திரைப்படமான ‘கங்குபாய் கதியவாடி’ பாலியல் தொழிலார்களைப் பற்றி பேசியது. மேலும், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

தொடர்ந்து, முதன் முறையாக ஹாலிவுட் படமொன்றில் இவர் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகையான கால் கோடட் மற்றும் ஜமியா டோர்னன் ஆகியோருடன் அலியா பட் நடித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு அலியா பட் அவரது காதலன், நடிகர் ரன்பீர் கபூருடன் திருமணம் நடைப்பெற்றது. சமீபத்தில் அலியா பட் தற்போது கற்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இவர் நடித்துள்ள ‘டார்லிங்ஸ்’ மற்றும்  ‘பிரம்மாஸ்திரா’ ஆகிய படங்கள்  விரைவில் வெளியாக உள்ளது.

மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்த அலியா பட் தெரிவித்திருப்பதாவது,

"ஹார்ட் ஆஃப் ஸ்டோன்- நீங்கள் தான் எனது முழு இதயம். மிக்க நன்றி அழகியே கால் கோடட். இயக்குநர், ஜமியா டோர்னனை இன்று மிஸ் செய்கிறேன். மறக்க முடியாத அனுபவத்திற்கு படக்குழுவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த அன்புக்கும் அரவணைப்புக்கும்  நன்றி". என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bollywood actress Alia Bhatt Hollywood film Heart of Stone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->