இந்த ஒரு படத்தால் பலகோடி நஷ்டம்.! அஜித் பட தயாரிப்பாளர் மனக்குமுறல்.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வருபவர் போனிகபூர். இவர் தமிழில் தல அஜித்தை வைத்து நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலினின் 15 திரைப்படத்தை தமிழ் ரீமேக் தயாரிக்கிறார்.

அதேசமயம் பாலிவுட்டிலும் நிறைய படங்களை தயாரித்து வருகிறார். பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க ஆசை கொள்கிறார். எனவே, அவ்வப்போது பிரச்சனையில் மாட்டிக் கொள்வது வழக்கமாக நடைபெறும். இந்த முறை பட ரிலீசுக்கு முன்பே அவர் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

அவர் தயாரிக்கும் பெரிய படங்களில் மைதான் திரைப்படமும் ஒன்று. அஜய்தேவ்கன் நடிக்கும் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 2 கோடி செலவில் செட் போடப்பட்டு டவதே புயல் ஏற்பட்டு அவை அனைத்தும் வீணாகி உள்ளது. எனவே, மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு போனிகபூர் ஆளாகியுள்ளார். 

கடந்த சில வருடங்களாக அவரது தயாரிப்பில் பல படங்கள் உருவாகி வந்த எந்த படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால், அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boni kapoor shock about maidaan movie 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->