இனி பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்..புதிய திட்டம் அறிவித்த சந்திரபாபு நாயுடு! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில்  பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை  முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த புதிய முயற்சியை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்த அந்த பதிவில், அவர் கூறியதாவது :"இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம் என்றும்  இந்தத் துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறேம் என பதிவிட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திரா முனைப்பாக உள்ளது என்றும்  வேலை வீட்டில் செய்தல், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்" அவர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் COWORKING SPACE எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐ.டி. அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐ.டி. நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த திட்டம் ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆந்திரப் பிரதேச அரசு, குறிப்பாக பெண்களுக்கு "வீட்டிலிருந்து வேலை" Work From Home கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது . மேலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Information Technology (IT) and Global Capability Centers policy 4.0. கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women can now work from home. Chandrababu Naidu announces new scheme


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->