லியோ ட்ரெய்லரால் அடுத்த சர்ச்சை! தியேட்டர்களுக்கு பறந்த நோட்டீஸ்! CBFC அதிரடி!!
CBFC sent legal notice to Leo Trailer screened theaters
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5ம் தேதி வெளியானது. இந்த ட்ரெய்லர் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. இதற்கிடையே லியோ ட்ரெய்லரில் இடம்பெற்று இருந்த ஒரு குறிப்பிட்ட வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய தணிக்கை குழுவால் சான்றிதழ் அளிக்கப்படாத ட்ரெய்லரை மக்களுக்காக ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் "ஒளிபரப்பு சட்டத்தின்படி சான்றிதழ் அளிக்கப்படாத உள்ளடக்கத்தை கொண்ட காணொளியை பொதுமக்களுக்கு திரையிட முடியாது. அவ்வாறு திரையிடுவது நீதிமன்றத்தால் தண்டிக்கக்கூடிய கிரிமினல் குற்றமாகும். லியோ ட்ரெய்லருக்கு தங்களால் சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் திரையரங்குகளில் லியோ ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது குறித்து வரும் அக்டோபர் 11ம் தேதிக்குள் ஆதாரத்துடன் பதிலளிக்குமாறு சென்னை மண்டல மத்திய தணிக்கை குழு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சான்றிதழ் அளிக்கப்படாத திரைப்படங்கள் மற்றும் டிரெய்லர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது மத்திய ஒளிப்பதிவு சட்டத்தின் 2வது பகுதியில் 7வது பிரிவின் கீழ் கடுமையான கூட்டு அல்லாத கிரிமினல் குற்றமாகும். அதன் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படாத லியோ ட்ரெய்லரை ஒளிபரப்பிய திரையரங்குகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற காரணத்தை தெரிவிக்குமாறு சென்னை மண்டல மத்திய தணிக்கை குழு அதிகாரி பாலமுரளி திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
English Summary
CBFC sent legal notice to Leo Trailer screened theaters