வலிமை கொண்டாட்டம்.. போலீசாரின் கையைக் கடித்த அஜித் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான நிலையில், போலீசாரின் கையைக் கடித்த 2 அஜித் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இந்த படத்தை காண  ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

இந்தநிலையில் நேற்று திருச்சி லால்குடியில் உள்ள திரையரங்கில் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது அஜீத் ரசிகர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக காவலர் ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்களை கண்டித்த காவலரின் கையை 2 ரசிகர்கள் கடித்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து காவலரின் கையைக் கடித்த 2 அஜித் ரசிகர்களையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Celebration of Valimai Ajith fans biting the hand of the police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->