#சென்னை || பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் வீட்டின் மீது தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையை அடுத்த பனையூரில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி வீட்டின் மீது கல் வீசியதாக இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு ஆதி வீட்டின் முன் இருந்த கதவு மற்றும் அவர் வீட்டின் உள்ளே கற்களை வீசி தாக்குதல் நடத்தியது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் அந்த வழியாக வந்த கார் பதிவு எண்ணை கொண்டு, வடபழனி சேர்ந்த பிரேம்குமார், அர்ஜூன் ஆகியோரை கைது செய்தனர். 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த இருவரும் மது போதையில் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai panaiyur music director home attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->