'எல்லா அரசியல்வாதிகளும் தான் சாதி, மதம் பார்க்கிறார்கள்' - நடிகர் விஷால் அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்திய குடியரசு தலைவரும் விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி நேற்று, தமிழ் உலகின் முன்னணி நடிகரான விஷால் தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் அரசியல் குறித்து பத்திரிக்கையாளர்கள் விஷாலிடம் கேள்வி கேட்டனர். அதற்கு விஷால் தெரிவித்திருப்பதாவது, ''அரசியல் என்பது வியாபாரம் கிடையாது. அது ஒரு சமூக சேவை. நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். எனக்கு அரசியலுக்கு வருவது புதுசு கிடையாது. 

'அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது நடிகர்கள் ஏன் அரசியல்வாதிகளாக கூடாது' எல்லா அரசியல்வாதிகளும் தான் சாதி, மதம் பார்க்கிறார்கள். நல்லது பண்ணலாம் என்ற எண்ணத்தில் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். 

தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் சமூக வலைத்தளம், போதைப்பொருள், மது போன்றவற்றிற்கு அடிமையாகி விட்டனர். 

இதனை தவிர்த்து அவர்களது வாழ்க்கையை ஆரோக்கியமான வழியில் கொண்டு சேர்த்தார்கள் என்றால் அவர்கள் ஒரு 10 பேர் பயன்படுவார்கள். கொரோனாவிற்கு பின்னிருந்து போதைப்பொருள் பயன்பாடு என்பது அதிகரித்துக் விட்டது. 

அதனை நிரந்தரமாக தடுப்பதற்கான வழிகளில் தற்போது இறங்கியுள்ளோம். இது போன்ற போதைப் பொருள்கள் பயன்படுத்தும் போது ஏற்படும் சிறிய சந்தோஷத்திற்காக ஏராளமான மக்கள் பலியாகுகின்றனர். சமூக வலைதளத்தை ஒரு நல்ல விஷயத்திற்காக பயன்படுத்துவது நல்லது'' என தெரிவித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cinema actor Vishal interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->