ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் 4.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்..!
Kashmir Earthquake Today
ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
ஹரியானாவின் சோனிபட்டில் ஒரு நாள் முன்பு 2.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சிறிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரிக்டர் அளவுகோலில் கடந்த மாதம், 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது.
குறித்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டு, 36.49° N
அட்சரேகையிலும், 71.27° E தீர்க்கரேகையிலும், 165 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர், டெக்டோனிக் தட்டு எல்லையில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது.
இன்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அனுபவங்களைப் பாரமுல்லாவில் வசிப்பவர்கள் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.