மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் நினைவிடம்; மோடிக்கு காங்கிரஸ் கடிதம்..! - Seithipunal
Seithipunal


 முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் நஅமைக்க வேண்டும் என  பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

 " மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே அவருக்கு நினைவிடம் அமைப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, பிரிவினையின் வலிகளையும், துன்பங்களையும் அனுபவித்து, தனது முழு மன உறுதியினாலும், தனது முழு மன உறுதியினாலும், உறுதியினாலும் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார்.

இவற்றை கருத்தில் கொண்டு  மன்மோகன் சிங்கின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலே அவருக்கான  நினைவிடம் 
 இருக்க வேண்டும் என்றும், குறித்த  கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்" என கார்கே கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த கோரிக்கைக்கு  மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.அத்துடன், காங்கிரஸ் உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது.

உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால்  மன்மோகன் சிங் (92), டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது மன்மோகன் சிங்கின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 27/12/24 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை காலை 8.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Memorial for Manmohan Singh in Delhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->