செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன் - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி.! - Seithipunal
Seithipunal


தாயாரை இழந்து தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். மேலும் மைசூரின் அரசு பள்ளியில் இவர் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அவருக்கு இரு மகன்களும் (நடிகர் அர்ஜுன் அவரின் சகோதரர்) ஒரு மகளும் உள்ளார்கள். 

இந்நிலையில், அண்மைய காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமி, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 
 
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 

"நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.

தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin mourning to arjum mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->