சர்ச்சைக்கு மேல் சர்ச்சை! குக் வித் கோமாளி வின்னர் பிரியங்கா!விட்டுக்கொடுக்காத விஜய் டிவி! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீசன், இதுவரை நடந்த சீசன்களில் மிக அதிக சர்ச்சைகளை உருவாக்கியதாக பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் முக்கிய நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட், பிரச்சனைகளின் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பின்னர், அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் "டாப் குக்கு டூப் குக்கு" நிகழ்ச்சியில் நடுவராக சேர்ந்தார். அவருடைய வெளியேறல், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து மணிமேகலை தொகுப்பாளினியாக இருந்தபோதும், நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகினார். பிரியங்கா டேஷ்பாண்டே தனது ஆங்கரிங் பணியில் அதிக டாமினேஷன் செய்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர் வெளியிட்டார். இது சோசியல் மீடியாவில் மிகுந்த விவாதத்திற்கு வழிவகுத்தது, பலர் மணிமேகலையையும், சிலர் பிரியங்காவையும் ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில், பிரியங்கா, இர்ஃபான், ஜோயா, விடிவி கணேஷ், பூஜா, சுஜிதாஆகியோர் பங்கேற்றனர். இறுதியில், பிரியங்கா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார், அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 

இரண்டாவது பரிசை சுஜிதா - புகழ் ஜோடி வென்றது, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. குரேஷிக்கும் சிறப்பு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

பிரியங்காவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது. சோசியல் மீடியாவில் மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையேயான மோதல், ரசிகர்களிடையே தொடர்ந்த விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversy over controversy Cook with Komali Winner Priyanka Vijay TV will not give up


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->