'காயத்ரி என் பொண்டாட்டி.' ப்ரெஸ் மீட்டில், பதறவைத்த கூல் சுரேஷ்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை காயத்ரியை பொண்டாட்டி என்று கூல் சுரேஷ் கூறியதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

நடிகை காயத்ரி மிகவும் தத்ரூபமாக நடிக்க கூடிய ஒரு நடிகை. இவரது தனிப்பட்ட திறமைக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இவர் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலமாகத்தான் அவரை பலருக்கும் தெரியும். 

அதன் பின் ரம்மி, பொன்மாலைப் பொழுது, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் மாமனிதன் படத்தில் காயத்திரியின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மனைவி கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக தனது நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பார். 

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில் சினிமா பிரபலமான கூல் சுரேஷ் காயத்ரி குறித்து பேசியபோது, படத்தில் மனைவி கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறுவதற்கு பதில் காயத்ரி எனக்கு பொண்டாட்டி என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது ரசிகர்களிடம் கண்டனங்களை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cool Suresh about actress ayathri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->