நாகசைதன்யாவா இது.? கஸ்டடி படத்தின் ட்ரெயிலர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகியது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்த திரைப்படம் மற்றும் சிம்புவின் காம்பேக் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக நடிகர் அசோக்செல்வன் நடிக்கும் மன்மதலீலை திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் முதல் முறையாக வெங்கட்பிரபு தெலுங்கு படத்தை இயக்குகிறார். 

இந்த திரைப் படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இதனை ஸ்ரீநிவாஸா சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், அரவிந்த் சாமி, பிரேம்ஜி,  பிரியாமணி, சம்பத் ராஜ் மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இதன் படப்பிடிப்புகள் மைசூர் பகுதியில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது கஸ்டடி என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாக சைதன்யா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கான கெட்டப்பில் இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

custody trailer video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->