நடுரோட்டில் வாலிபர் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு - கோவையில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் தான் வேலை செய்து வரும் நிறுவனத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக தேவையான பொருட்கள் வாங்க அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றார்.

அதன் படி அவர் பொருட்கள் வாங்கி முடித்துவிட்டு தனது நிறுவனத்துக்கு திரும்பி வந்துள்ளார். தொடர்ந்து அவர் சாலையை கடக்க முயன்றபோது போலீஸ் ஏட்டு ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததால், அதை கவனித்த மோகன்ராஜ், சாலையின் நடுவே நின்றுவிட்டார்.

உடனே போலீஸ் ஏட்டு திடீரென்று வாகனத்தை நிறுத்தி மோகன்ராஜ் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு எதுவும் நடக்காததுபோன்று சென்றார். இந்த காட்சி அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியா நிலையில், சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில், காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின்பேரில் அந்த போலீஸ் ஏட்டு யார் என்பது குறித்து விசாரணை நடத்தபட்டது. அதில் அவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ஜெயப்பிரகாஷ் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து காவல் ஆணையர் அவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer slap youth in coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->