பிரபலத்தின் மகளை இரண்டாவது திருமணம்.! டி.இமானின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் வைரல்.! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் உருவான தமிழன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இசையமைப்பாளர் இமான். இவர் பாடகராகவும் இருந்து வருகின்றார். கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு பெண்ணை இமான் திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ல் பிரிந்தனர். தங்களது இரு மகள்களின் பாஸ்போர்ட்டும் இமானிடம் இருந்துள்ளது. 

குழந்தைகளை இமான் சந்திக்க கூடாது என்பதற்காக இமான் மனைவி மோனிகா அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முயற்சித்து வருவதாகவும், எனவே குழந்தைகளுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக தெரிவித்து புதிய பாஸ்போர்ட் மோனிகா பெற்றுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இசையமைப்பாளர் இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் டி.இமான் கோலிவுட்டில் கலை இயக்குனராக பணியாற்றிய உபால்டுவின் மகள் அலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கான, புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

d imman second marriage photos viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->