டி50 படத்தின் முதல் பார்வை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பலதுறைகளிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டே வருபவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் தனது ஐம்பதாவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் மிக முக்கியமானது என்பதால், இதனை தானே, இயக்கி நடித்திருக்கிறார். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது குடும்ப சென்டிமென்ட்டு கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்றுத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் விரைவில், இதன் முதல் பார்வை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, தற்போது ‘டி50’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் தலைப்பு 'ராயன்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த வருடம் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

d50 movie first look released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->