மகாராஷ்டிரா ரெயில் விபத்து: பொய்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.வி.பிரகாஷ்.!
music director gv prakashkumar tweet about maharastra train accident
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி 'லக்னோ-மும்பை புஸ்பக்' எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் வந்து கொண்டு இருந்தபோது ரெயிலின் பெட்டி ஒன்றில் தீப்பொறி பறந்துள்ளது.
இதனால், பயணி ஒருவர் பயத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. உடனே சில பயணிகள் ரயிலில் இருந்து அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் மீது மோதிச் சென்றது.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இசையமைப்பாளரும், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், லக்னோவ் - டெல்லி இடையேயான ரெயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி, அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15 க்கும் மேற்பட்டோர் எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்டு இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன்" என்று தெரிவித்தார்.
English Summary
music director gv prakashkumar tweet about maharastra train accident