மூன்றே நாளில் 300 கோடி - அதிரவைக்கும் தேவரா படத்தின் வசூல்.!  - Seithipunal
Seithipunal


ஹிந்தி திரைத்துறையில் பணியாற்றி வரும் ஜான்வி கபூர் முதல் முறையாக தென்னிந்திய திரையுலகில் 'தேவரா பாகம்-1' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில், கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார்.

இவருடன், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூனியர் என்டிஆரின் 30வது படமான 'தேவரா பாகம்-1' கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. 

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.இந்த படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாயும், 2-வது நாளில் உலகளவில் ரூ. 243 கோடி வசூல் செய்தது. 

இந்த நிலையில், மூன்றாவது நாளில் ரூ. 304 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்தப்படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devara movie 300 crores collection within 3 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->