காஷ்மீரில் 80 சதவீதம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் என்கிறார் ராணுவ தலைமை தளபதி..! - Seithipunal
Seithipunal


ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் பெருமளவிலான வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என ராணுவ தலைமை தளபதி கூறியுள்ளார். இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி, ஆண்டுதோறும் ராணுவ தினத்தில் நடத்தப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று பேசியுள்ளார்.

அத்துடன்,  ஜம்மு மற்றும் காஷ்மீரில் செயல்பட்டு வரும் 80 சதவீதம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் பெருமளவிலான வன்முறை சம்பவங்களுக்கு காரணம் பாகிஸ்தான் என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.

மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்களில் 60 சதவீத வாக்கு பதிவு நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு அர்த்தம் என்னவெனில், உள்ளூர் மக்கள் அமைதியுடன் செல்கின்றனர் என்பதே. காஷ்மீர் மக்கள் வன்முறையை விட்டு விலகியிருக்கின்றனர். ஆனால், வன்முறையானது நம்முடைய மேற்கத்திய பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானால் நடத்தப்படுகிறது என்றும் அவர் மேலும்,கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Army Chief says that 80 percent of the terrorists in Kashmir are Pakistanis


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->