விஜய் கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்மல்குமார்! எடப்பாடி தலையில் இடியை இறக்கிய சம்பவம்! - Seithipunal
Seithipunal


அதிமுகவை சேர்ந்த மிக முக்கியமான ஒரு அரசியல் புள்ளி இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று இரண்டாவது நாளாக பனையூரில் உள்ள விஜய் கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

இன்றைய தினம் அதிமுகவின் மிக முக்கிய புள்ளி ஒருவர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக வெளியான தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

அதிமுகவின் ஐடி விங்க் நிர்வாகி நிர்மல் குமார் தற்போது பனையூரில் உள்ள விஜய் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

மேலும் நிர்மல் குமார் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து தமிழக வெற்றி கழகத்தின் ஐடி விங்கை எடுத்து நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK NIRMAL KUMAR TVK VIJAY ADHAV ARJUNA


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->