நாட்டின் பொருளாதாரம் மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்பு- ப.சிதம்பரம் கணிப்பு! - Seithipunal
Seithipunal


நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும்  முந்தைய ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளது என ப.சிதம்பரம் கூறினார் . 

நாட்டின் பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராஜீவ் கவுடா மற்றும் அவரின் குழுவினர் தயாரித்த அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட முன்னாள் நிதியமைச்சர்  ப.சிதம்பரம் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராஜீவ் கவுடா மற்றும் அவரின் குழுவினர் தயாரித்த அறிக்கையை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும்  முந்தைய ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளது என கூறினார் . மேலும் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்றும்  வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் விகிதம் 45 சதவீதத்தை நெருங்கியுள்ளது என தெரிவித்த ப.சிதம்பரம் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அவ்வப்போது வழங்கும் பணி நியமன கடிதங்கள் மூலம், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறதே தவிர, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என கூறினார்.

மேலும் பேசிய   ப.சிதம்பரம் கடந்த 4 முதல் 5 ஆண்டுகள் மக்களின் வருமானத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் உணவு, கல்வி, சுகாதாரப் பணவீக்கம் இரட்டை இலக்கங்களை எட்டியுள்ளது என்றும் பணக்காரர்களுக்கும், ஏைழகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்றும் இதை சரி செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்போது .இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indias economy may shrink by another 2 per cent P Chidambaram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->