பிக் பாஸில் இருந்து முதல் வாரத்தில் எலிமினேஷன் இவர் தான்.?! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல், கலவையான போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

அத்துடன் அன்றாடம் புதிய புதிய டாஸ்க்களை கொடுத்து பிக் பாஸ் வீட்டை எப்பொழுதும் பரபரப்பாக வைத்துள்ளார் பிக் பாஸ். இதில் முக்கியமாக கவனிக்கத்தக்க போட்டியாளராக ஜிபி முத்து இருக்கிறார். அவருக்கு வெளியில் எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் ஆதரவு கொடுத்து வருகின்றது. 

ஜிபி முத்துவுக்காகவே பிக் பாஸ் பார்க்கும் ரசிகர் கூட்டமும் இருக்கின்றது. இத்தகைய சூழலில், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி தொடர்ந்து ஜி.பி.முத்துவை டார்கெட் செய்து வருகின்றார். இதன் ஒரு பகுதியாக, ஜி.பி.முத்துவிடம் சென்று அவர் வாக்குவாதம் செய்து, "நீங்கள் நடிக்கிறீர்கள்." என்று கூற இதைக் கேட்ட ஜிபி முத்து கதறி கதறி அழுகிறார். 

"என் மகள் போல இருக்கிறார். என்னை பார்த்து, நடிக்கிறாய் என்று கூறுகிறார். என்னால் தாங்க முடியவில்லை." என்று அழுகிறார். மற்ற போட்டியாளர்கள் ஜி பி முத்துவை சமாதானம் செய்கிறார்கள். பிக் பாஸ் ஆரம்பித்தது முதலே, தனலட்சுமி ஜிபி முத்துவிடம் எப்பொழுதும் ஒரு மாதிரியாக தான் நடந்து கொண்டிருக்கிறார். 

அதிக ரசிகர்களைக் கொண்ட ஜி.பி.முத்துவின் ஆர்மி இந்த வார எலிமினேஷனில் நிச்சயம் தனலட்சுமி தான் வெளியேறுவார். அவருக்கு எதிராக தாங்கள் வாக்களிக்க போவதாக தெரிவித்து வருகின்றனர். இதனால், முதல் வாரத்தில் தனலட்சுமி வீட்டிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanalakshmi may eliminate first of bb6


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->