தனுஷின் 50- வது பட அறிவிப்பு.. ஆனால், ஒரு ட்விஸ்ட் வைத்த தயாரிப்பு நிறுவனம்.!
Dhanush 50th Movie announcement
அதிகபடியாக சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் எச்.வினோத் ஆக்ஷன் படங்களை தான் இயக்கி இருப்பார். இவர் தற்போது நகைச்சுவை ஜானரில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக தனுஷின் படத்தை வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால் தனுஷை வைத்து அவர் படம் பண்ணுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், வெளியான தனுஷின் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. ஆகவே, எச்.வினோத்துடன் கைக்கோர்க்க தனுஷும் தயாராகி விட்டதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷின் 50 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. ஆனால், இந்த படம் பற்றிய வேறு எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. எனவே இது எச்.வினோத் இயக்கவுள்ள படம் தான் எனவும் முக்கிய நபர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Dhanush 50th Movie announcement