"அப்படியா செஞ்சாரு..." காதலிக்கும் போதே நயன்தாராவை அழ வைத்தாரா விக்னேஷ் சிவன்.? ரசிகர்கள் ஷாக்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நயன்தாரா. இவர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய், அஜித், ரஜினி என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து நம்பர் ஒன் கதாநாயகியாக நீண்ட நாட்களாக வளம் பெறுபவர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வந்தார். இந்தக் காதல் ஜோடி கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டது. இவர்கள் இருவருக்கும் வாடகை தாய் முறையில்  இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நயன்தாரா அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் பல திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையேயான சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நயன்தாரா அழுவது போன்ற ஒரு காட்சிக்காக அவரை அழ வைத்ததாக தெரிவித்துள்ளார். இந்த காட்சியின் சூட்டிங் என்பது அதிகமாக கூட்டம் கூடியதால் மூன்று நாட்கள் கழித்து எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Did Vignesh Sivan make Nayanthara cry while love


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->