நாட்டாமங்கலம் முனியப்பன் கோவில் திருவிழா..கிடா, கோழி பலியிட்டு வழிபட்ட மக்கள்!
Nattamangalam Muniappan Temple Festival People worshipped the goat and the chicken
சேலம் மாவட்டம் எஸ். நாட்டாமங்கலம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ சக்தி காளியம்மன் ஸ்ரீ முனியப்பன் கோவில் திருவிழாவில் பொங்கல் வைத்து கிடா, கோழி பலியிட்டு மக்கள் வழிபட்டனர்.
சேலம் மாவட்டம் எஸ். நாட்டாமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ சக்தி காளியம்மன் ஸ்ரீ முனியப்பன் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. பங்குனி மாதம் 18ம் தேதி 1-4-2025 செவ்வாய்க்கிழமை முதல் 23 -ந் தேதி 6-4-2025 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்.
3 - 4 - 2025 வியாழக்கிழமை காலை 7 மணிக்கு அனைத்து கோயில்களிலும் பொங்கல் வைத்து கிடா, கோழி ,வெட்டுதல் வருவான் வடிவேலன், கார்,தேங்காய், குலை, மதியம் 3-00 மணிக்கு கூல் பானை நீர் மோர் மற்றும் பாலிகை கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது .
மாலை 5 மணிக்கு பூங்கரகம் அக்னி கரகம் மாவிளக்கு ஊர்வலமாக கோயில் சுற்றி வந்தனர் அலகு குத்துதல் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து 4-4-2025 வெள்ளிக்கிழமை காலை 9 - மணிக்கு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில்வளகத்தில் பெண்களுக்கான கோலப் போட்டிகள் மற்ற விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கு திருவிளக்கு பூஜையும் இரவு 9 மணி அளவில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ சக்தி காளியம்மனுக்கு சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெறும்.
5-4-2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ சக்தி மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா ஊர்வலமாக மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் கோவிலுக்கு வரும் இவ்விழாவில் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
English Summary
Nattamangalam Muniappan Temple Festival People worshipped the goat and the chicken