பிறந்தநாள் ஸ்பெஷல்... ஹரிஷ் கல்யாண்னின் "டீசல்" பட நியூ போஸ்டர் ரிலீஸ்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ஹரிஷ் கல்யாண், சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உள்ளார். 

இவர் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ''டீசல்'' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை எஸ்.பி. சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. 

திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். மேலும் வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ''டீசல்'' திரைப்படத்தின் புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diesel film new poster release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->