#Breaking: இயக்குனர் அமீரின் தாய் திடீர் மரணம்.. வேதனையில் ராஜன்..! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் மௌனம் பேசியதே,ராம், பருத்திவீரன், ஆதிபகவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் தான் இயக்குனர் அமீர். இவர் வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது பலருக்கும் பிடித்தமான பிரபலமான கதாபாத்திரமாகும்.

தற்போது வரை கதாபாத்திரத்தின் பெயரை வைத்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். இத்தகைய சூழலில் இயக்குனர் அமீரின் தாய் பார்த்து பாத்துமுத்துபீவி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 85 வயதாகும் நிலையில் தாயை இழந்து வாடும் இயக்குனர் அமீருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்," தமிழ் தேசிய போராளி அமீரின் தாய் இறந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அந்த தாயின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director amir mother Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->