நான் ஒரு படம் எடுக்க பல கதைகள் வேண்டும் - ஓப்பனாக பேசிய அட்லீ! - Seithipunal
Seithipunal


ஒரே ஒரு கதையை மட்டும் வைத்து என்னால் திரைப்படத்தை இயக்க முடியாது என்றும், பலதரப்பட்ட கதைகள் தனக்கு தேவைப்படுவதாகவும், இயக்குநர் அட்லீ மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஏழாம் தேதி வெளியான ஜவான் திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் குறித்து, இயக்குநர் அட்லீ மனம் திறந்து அண்மையில் ஒரு பேட்டியில், "பலதரப்பட்ட ரசனைகள் உள்ள ரசிகர்களுக்கு, ஒரு திரைப்படத்திற்கும் பல கதைகள் இருப்பது என்னை பொறுத்தவரை அவசியம்.

ஜவான் படத்தின் கதை அம்சத்தை பொறுத்தவரை, ஒரு சில ரசிகர்களுக்கு தந்தை - மகன் உறவு பிடித்திருக்கும். சில ரசிகர்களுக்கு உணர்வு பூர்வமான காட்சிகள் பிடித்திருக்கும். இன்னும் சில ரசிகர்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் பிடித்திருக்கும்.

ஆக ஏதோ ஒரு வகையில் இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கும். அதுதான் என்னுடைய பாணி. அதன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம்.

உதாரணத்திற்கு ஒரு திருவிழாவுக்கு சென்றால், அங்கே பெரிய பெரிய ராட்டினங்கள் இருக்கும், பெரிய தோசைகள் கிடைக்கும். இப்படி பல தரப்பட்ட விஷயங்கள் ஒரு திருவிழாவில் நமக்கு கிடைக்கும். நாம் திருவிழா முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மனதிருப்தியுடன் செல்வோம்.

என்னுடைய இயக்குநர் பணியும் அதுதான். என்னுடைய திரைப்படங்கள் உங்களுக்கு மிகச் சிறந்த ஒரு பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

நீங்கள் என்னுடைய திரைப்படத்தை பார்த்து, வீட்டுக்கு செல்லும்போது ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டோம் என்ற ஒரு பொறுப்புணர்வு உங்களுக்கு கிடைக்க வேண்டும். இதுதான் என்னுடைய திரைப்பட இயக்கத்திற்கான கொள்கை.

என்னால் ஒரு கதையை வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது. பல வகையான கதைகள், கதைக்களங்கள் எனக்கு தேவைப்படுகிறது" என்று இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Atlee Say About Film making and Story


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->