"இந்தா வச்சிக்கோ.. டாக்டர் பட்டம்." வாரிவாரி கொடுத்த வள்ளல் தலைமறைவான சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


பலருக்கு போலியாக டாக்டர்கள் கொடுத்த ஹரிஷை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் எனும் பெயரில் அரசு முத்திரையை முறைகேடான வகையில் பயன்படுத்தி சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டமானது வழங்கப்பட்டது. 

இதில் youtube பிரபலம் கோபி, சுதாகர், நடிகர் கோகுல், கஜராஜ் இசையமைப்பாளர் தேவா, சாண்டி மாஸ்டர், ஈரோடு மகேஷ் மற்றும் வைகைப்புயல் வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டு பட்டம் வாங்கினார்கள். 

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இந்த பட்டத்திற்கும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த நிலையில் இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  

இதையடுத்து இத்தகைய போலி டாக்டர் பட்டத்தை பணம் வாங்கிக்கொண்டு பிரபலங்களுக்கு வாரி வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகியுள்ளார். அவருடைய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ஹரீஷை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director harish may arrested by Police But He Hides 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->