தளபதிக்கு இரண்டாவது முறை கதை சொல்லும் கார்த்திக் சுப்பாராஜ்.!  - Seithipunal
Seithipunal


தளபதிக்கு இரண்டாவது முறை கதை சொல்லும் கார்த்திக் சுப்பாராஜ்.! 

தமிழ் சினிமாவில் 'பீட்சா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பாராஜ். தற்போது இவர் ‘ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாவது பாகமான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர். 

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தின் முதல் பாகமான ‘ஜிகிர்தண்டா’ படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில்  சமீபத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்து இதன் கொண்டாட்டம் நடந்தது.

அந்தக் கொண்டாட்டத்தின் போது இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் ஊடகங்களிடம் பேசியதாவது, ‘நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே என் விருப்பம். ’ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் முடிந்த பிறகு நிச்சயம் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். 

இது அவரது படங்களில் சிறந்த படமாக இருக்கும் என்று பேசியுள்ளார். ஏற்கனவே ஒருமுறை கார்த்திக் சுப்பாராஜ் நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருந்தார். ஆனால், அந்தக் கதை நடிகர் விஜய்யின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல் இல்லாததால் முதல் முறை வாய்ப்பு கை கூடவில்லை. தற்போது இரண்டாவது முறையாக கார்த்திக் சுப்பாராஜ் சொல்லும் கதை விஜய்க்கு பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director karthick supparaj story tell to vijay second time


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->