பிரச்சனைக்கு காரணம் என்ன? செல்வராகவனின் பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் 'துள்ளுவதோ இளமை' என்ற சர்ச்சையான திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன்.

தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கமென்ன, ஆயிரத்தில் ஒருவன் என தனித்துவமான கதைகளால், தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து உள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

மேலும், நடிகர் விஜய், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும், முக்கியமான கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.

அண்மைய காலமாக சமூக வலைத்தளங்களில் வாழ்க்கை தத்துவங்களையும் இயக்குனர் செல்வராகவன் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் வாழ்க்கையின் 90 சதவீத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? என்ற ஒரு தத்துவத்தை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், "எதை சொல்ல வந்தாலும், இதை சொல்லலாமா? என சில நொடிகள் யோசித்து விட்டு சொல்லுங்கள். 90% பிரச்சனைகள் அதிலேயே ஓய்ந்துவிடும்" என்று செல்வராகவன் தெரிவித்து உள்ளார்.

செல்வராகவனின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது பதில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர்,  'நல்ல வேலை நீங்கள் சொல்லி விட்டீர்கள். அதுவும் சரியாக சொல்லி விட்டீர்கள்' என்று தெரிவித்துள்ள பின்னூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Selvaraghavan Life Quote


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->