இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது வழக்குத் தொடர்வேன்: இயக்குநர் குமரன் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு எல்ஐசி (லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி செட்டி, நடிகர் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக இயக்குனர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்ததோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு எல்ஐசி என பெயரிடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். 

காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு எல்ஐசி என்ற பெயரை என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்துள்ளேன். 

இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய திரைப்படத்திற்கு அந்த பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனம் மூலம் எனை அணுகினார். 

ஆனால் எல்ஐசி என்ற தலைப்பு நான் இயங்கும் படத்திற்கு மிகச் சரியாகப் பொருந்துவதால் நான் மறுத்து விட்டேன். இருப்பினும் விக்னேஷ் சிவன் அவர் தயாரிக்கும் திரைப்படத்திற்கு இந்த தலைப்பு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது. 

இது போன்ற செயலில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director Vignesh Sivan against case Director Kumaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->