7 நாட்கள் கெடு... 'பெயரை மாற்ற வேண்டும்' - இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எல் ஐ சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. 

இந்நிலையில்  எல் ஐ சி என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்ஐசி நிறுவனம் சார்பில் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கு வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அதில், எல்ஐசி என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு. அதனை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். தங்களது நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை குறைக்கும் வகையில் இந்த திரைப்படத்தின் தலைப்பு இடம் பெற்றுள்ளது. 

அதனால் 7 நாட்களுக்குள் திரைப்படத்தின் தலைப்பை மாற்றி வேறு பெயரை வைக்க வேண்டும். இல்லையென்றால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director Vignesh Sivan movie title change Warning 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->