இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் 2018 - 2019 மற்றும் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். இந்த விழாவிற்காக பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 300 நபர்கள் அமரும் வகையில் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையாராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்குகிறார். இந்த பட்டமளிப்பு விழாவிற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் மதுரை வருகிறார். 

இதற்காக  மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் உள்ளிட்ட இடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய உள்வளாகத்திற்குள் பார்வையாளர்களுக்கு நேற்று முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 12-ந்தேதியில் இருந்து வழக்கம்போல், பார்வையாளர்கள் உள்வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor award for music directer ilaiyaraja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->