மாஸாக வெளியான டான் படத்தின் 'ஜலபுல ஜங்கு' பாடல்.! இணையத்தில் வைரல்.!
Don 1st single release
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் நடித்துள்ள டான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீப்த்தில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, சூரி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. மேலும், தற்போது இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.