பல விருதுகள்... புகழ்பெற்று விளங்கிய கவிஞர்... யார் இவர்?
dr bendre birthday 2022
தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே :
வரகவி என்ற சிறப்பு பெயர் கொண்ட கன்னடக் கவிஞர் த.ரா.பேந்திரே 1896ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாடு என்ற இடத்தில் பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே ஆகும். மேலும் இவர் அம்பிகாதனயதத்தா என்ற புனைப்பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த பெயரின் அர்த்தம் அம்பிகாவின் மகன் தத்தன் என்பதாகும்.
இவருக்கு கர்நாடக குல திலகம் என்ற பெயரும் உண்டு. இவர் பேச்சு நடையிலேயே கவிதைகளை எழுதினார். இவரது பாடல்களில் நாட்டுப்புற நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.
இவருக்கு 1958ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 1968ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1973ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற இவர் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.